ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டு போனுக்கு மாறுகிறீர்களா?அப்போ இதை படியுங்க!!

ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு வாட்ஸ்அப் தகவல்களை மாற்ற உதவும் வழிகளை அறிய, கீழே தொடர்ந்து படியுங்கள்.

ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டு போனுக்கு மாறுகிறீர்களா?அப்போ இதை படியுங்க!!

ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு மாறும் போது, நம் முன் தோன்றும் பெரிய கேள்வி இதுதான், டேட்டாக்களை எவ்வாறு இரண்டு போனுக்கு இடையே மாற்றுவது, back up எப்படி செய்வது என்பது தான். அதிலும் இந்த இரண்டு போன்களும் முற்றுலும் வேறுபட்ட OS கொண்டவை. போட்டோக்கள், வீடியோக்கள், போன் நம்பர்கள், நோட்ஸ்கள், ரிமைன்டர்ஸ் மற்றும் காலண்டர் தகவல்கள் போன்ற டேட்டாக்களை மாற்றுவதற்கான முறையான வழிகள் நிறைய உள்ளன. ஆனால் அவை எதுவும் வாட்ஸ்அப் தகவல்களை ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு மாற்றுவதற்கான வழியை தருவதில்லை.

 

 

இந்த இரண்டு போன்களுமே டேட்டா back up ஐ நிர்வகிக்கும் முறையில் உள்ள வேறுபாடுகள் தான் இதற்கு காரணமாகும். ஆப்பிள், வாட்ஸ்அப்பை iCloud இல் மட்டுமே back up செய்ய அனுமதிக்கிறது அது போல் கூகிளும் கூகிள் டிரைவில் மட்டுமே back up  செய்ய அனுமதிக்கிறது.

 

ஒருவேளை ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு வாட்ஸ்அப் back up ஐ மாற்ற ஏதேனும் வழி இருந்தால்?? அதை எப்படி செய்வது என்று அறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றுங்கள். அதை விரிவாக பார்க்கும் முன்பு, இதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். இந்த செயல்முறை அவ்வளவு எளிதானதோ அல்லது நேரடியானதோ அல்ல, இதை செய்ய கொஞ்சம் நேரம் ஆகும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

 

ஐபோனில் செய்ய வேண்டிய வழிமுறைகள்:

 

1. ஐபோனில் வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் இடம்மாற்ற செய்ய விரும்பும் chat ஐ இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

2. இப்போது, ‘More’ பட்டனை செலக்ட் செய்து, Export chat என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்

3. இங்கே மெயில் ஆப்ஷனை செலக்ட் செய்து, உங்கள் Android போனுடன் இணைக்கப்பட்ட மெயில் ஐடியை கொடுக்கவும்.               

 

 

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

 

1. மெயில் ஐடியை திறந்து,அதில் இணைக்கப்பட்ட எல்லா லிங்க்ட் பைல்களையும் டவுன்லோட் செய்யவும்.

2. பின்னர் வாட்ஸ்அப் அப்ளிகேஷனை டெலீட் செய்து, பின் அதை கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து மீண்டும் டவுண்லோட் செய்யவும்.

3. மறுபடியும் வாட்ஸ்அப்பை இன்ஸ்டால் செய்யும் போது, ஸ்கீரினில் வரும்  Restore ஆப்ஷனை செலக்ட் செய்யுங்கள்.

4. Restore முழுவதும் முடியும்வரை காத்திருந்து பின், Next பட்டனை அழுத்தினால், எல்லா chatsம் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் கிடைக்கும்.

 

 

 

இது கொஞ்சம் கடினமான செயல் தான், நீங்கள் தகவல்களை மாற்ற வேறு எந்த அப்ளிகேஷன்களயும், சேவைகளையும் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், இது தான் சிறந்த முறையாகும்.